19 03 2023
நாடு முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். காய்ச்சல், சளி, இருமல் இதற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர். H3N2 வைரஸ் தொற்று பரவல் குறித்து மருத்துவர்கள் கூறுவது குறித்து இங்கு காண்போம்.
பிற்பகல் 1.30, பேஸ்மென்ட் ஓ.பி.டி ஃபோர்டிஸ் மருத்துவமனை, வசந்த் குஞ்ச்: மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த தாய்மார்கள் அழுகும் தங்களது குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சகளை கூறினர். இது தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பா என்று சந்தேகிக்கப்படப்படுகிறது. டாக்டர் மனோஜ் ஷர்மா, மூத்த ஆலோசகர், இன்டர்னல் மெடிசின், காலை வரை இடைவிடாமல் நோயாளிகளைப் பார்த்துவிட்டு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் தனது ஆலோசனையை மீண்டும் தொடங்கியவுடன், 30 வயதான பெண் ஒருவர் அதிக காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வந்தார். மேலும் அது கோவிட் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காய்ச்சலுக்கான நிலையான மருந்துகளை (பாராசிட்டமால்) எடுத்துக்கொள்வது, முகக்கவசம் அணிவது மற்றும் கை சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மருத்துவர் அவரிடத்தில் கூறினார். 3 நாட்களில் காய்ச்சல் குறைந்துவிடும். அதுவரை இந்த மருந்துகளை உட்கொள்ளவும். 5-ம் நாளில் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை வரவும் எனக் கூறி அனுப்பினார்.
இன்ஃப்ளூயன்சா வைரஸின் புதிய திரிபு H3N2, இருமல், தொண்டையில் எரிச்சல், தொண்டை புண், காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் வலி மற்றும் சோர்வு போன்ற வழக்கமான காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டுள்ளது. எனவே, பரவுவதைத் தடுக்கவும், அவர்களுக்கு அறிகுறி சிகிச்சை அளிப்பதற்காகவும் நோயாளிகள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் கூறுகையில், கடுமையான இருமல் பாதிப்பு இருப்பதாக கூறினார். காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுமாறு டாக்டர் சர்மா அவருக்கு அறிவுறுத்துகிறார்.
“வைரஸின் வெளிப்பாடு வயதானவர்களில் கடுமையானது. தற்போதுள்ள ஃப்ளூ ஷாட்கள் வைரஸின் இந்த விகாரத்தை எதிர்கொள்ள புதுப்பிக்கப்படவில்லை, ஆனால் நீங்கள் நீங்கள் இப்போது ஃப்ளூ ஷாட் எடுத்தால், தற்போதைய அலையில் அது வேலை செய்யாமல் போகலாம், ஏனெனில் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் தேவைப்படும். ஆனால் நாம் அனைவரும் ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசிகளை எடுக்க வேண்டும் மற்றும் நீரிழிவு மற்றும் இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆண்டுதோறும் நிமோனியா தடுப்பூசிக்கு செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்த வைரஸ் பொதுவாக 15 வயதுக்குட்பட்ட அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எளிதில் பாதிக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே இரு வயதினருக்கும் தடுப்பூசிகள் அவசியம்” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், H3N2 புதிய வைரஸ் இல்லை என்று டாக்டர் சர்மா கூறுகிறார். 1968-69-ல் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டது. தற்போது கோவிட் போல் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. 1968-69 நாட்களில் சுமார் நான்கு மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அது சமூகத்தில் நிலைத்திருக்கும் மற்றும் சமூகம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய போதெல்லாம், அது மீண்டும் தலைதூக்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், ஒவ்வொரு வைரஸிலும் ஆன்டிஜெனிக் மாறுபாடுகள் நிகழ்கின்றன. ஏ, பி, சி, டி வகைகளாக வகைப்படுத்தப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸிலும் இதேதான் நடந்தது. H3N2 என்பது இன்ஃப்ளூயன்ஸா A இன் துணை வகை என்று அவர் கூறினார்.
H3N2 நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு சிகிச்சை தேவையா? “இல்லை. வயதானவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். லேசான அறிகுறிகள் இருந்தால், பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை. தேவையற்ற பயம் வேண்டியதில்லை என்று அவர் மேலும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/lifestyle/h3n2-virus-rages-in-cities-how-to-protect-kids-and-elderly-616267/