19 3 23
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உதவிக்தொகை குறித்து அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்றபின் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் கேட்கும்போது விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர்கள் கூறியிருந்தனர்.
இதனிடையே தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இதில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த முக்கிய வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதம் ரூ.1000, மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஒரு சில சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவது எப்போதிலிருந்து என்ற அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து கடந்த 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமை ஓரளவு சீராகி இருக்கிறது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் மேலும் பல சலுகை அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-tn-budget-2023-24-finance-minister-ready-616165/