ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

கோவையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி: பொதுமக்கள் பீதி

 9 4 23 

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு மூதாட்டிகள் இன்று அதிகாலை சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 2 மூதாட்டிகள் காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த 56 வயது மூதாட்டி காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த மாதம் 23-ம் தேதி காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதே போன்று கடந்த புதன்கிழமை 55 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு
உயிரிழந்த சம்பவம் கோவையில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

source https://tamil.indianexpress.com/tamilnadu/two-women-who-tested-postive-for-covid-dies-in-coimbatore-632826/