சுங்வரி செலுத்த முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர், சுங்கச்சாவடியில் உள்ள பிளாஸ்டிக் சேர்களை உடைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் அருகே, சுங்கவரி செலுத்த முடியாது என வாக்குவாதத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஈடுபட்டனர். மேலும் சுங்கச்சாவடியில் பிளாஸ்டிக் சேர்களை உடைத்தனர்.
அச்சப்பாக்கத்தை அடுத்த தொழிப்பேடு – ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூரில் இருந்து சென்னை வந்தனர். அவர்கள் வந்த காருக்கு சுங்க கட்டணம் செத்த வேண்டும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு எதிராக பேசிய கட்சி தொண்டர்கள், கட்டணம் செலுத்த முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வைத்திருந்த பிளாஸ்டிக் சேர்களை உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்நிலை இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-vazhvurumai-katchi-members-clash-toll-gate-chennai-632803/