சனி, 30 டிசம்பர், 2023

இந்து வேறு… இந்துத்துவா வேறு.. நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன்..” – சித்தராமையா பேச்சு

 

“இந்து வேறு… இந்துத்துவா வேறு.. நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன்..”  என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில முதலமைச்சரும் , கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்த ராமையா பெங்களூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சித்தராமையா தெரிவித்ததாவது..

“இந்துத்துவா வேறு… இந்து வேறு. நான் ஒரு இந்து.  பாஜகவினர் மட்டும்தான் ராமரை  வணங்குவார்களா நாம் வணங்க மாட்டோமா. இதற்கு முன்னர் இங்கு ராமர் கோயில்களை நாம் கட்டவில்லையா. ராமர் பஜனைகளை நாம் பாடவில்லையா.

எனது சொந்த  கிராமத்தில் டிசம்பர் கடைசி வாரத்தில் மக்கள் ராமர் பஜனை பாடுவார்கள்.  அந்த பஜனைகளில் நானும் பங்கு கொள்வேன். இது போன்ற நிகழ்வுகள் மற்ற கிராமங்களிலும் நடைமுறையில் இருக்கின்றன.

இந்துத்துவா என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்துத்துவா வேறு, இந்து தர்மம் வேறு. நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல. நான் ஓர் இந்து, ஆனால் மதவாதத்தையும் இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன். எந்த மதமும் கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்துத்துவா கொலை மற்றும் மக்களிடம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது.

ராமர் கோயில் கட்டுவதை நாங்கள் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், அதை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதைத்தான் எதிர்த்துக் கேள்வி கேட்கிறோம்” என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/hindu-is-different-hindutva-is-different-i-am-against-hindutva-siddaramaiah-speech.html#google_vignette