வியாழன், 21 டிசம்பர், 2023

தமிழ்நாட்டில் 7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

21/12 /2023

தமிழ்நாட்டில் 7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக இன்று (டிச.21) முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://news7tamil.live/chance-of-moderate-rain-in-tamil-nadu-for-7-days-meteorological-department-information.html