வியாழன், 21 டிசம்பர், 2023

தென் மாவட்ட வெள்ள பேரிடர் | நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

 21 12 2023

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக 1,000 ரூபாயும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு 6,000 ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ. 1,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார். மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் 5 லட்சமாகவும், குடிசை இழந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், 33% அதற்கு மேல் பதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றிற்கு 17 ஆயிரம் ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 8500 ரூபாய், எருது பசு கால்நடை உயிரிழப்பிற்கு 37500 ரூபாயும், வெள்ளாடு செம்மறி உயிரிழப்பிற்கு 4000 ரூபாயும், சேதமடைந்த படகுகளுக்கு 32 ஆயிர ரூபாயில் இருந்து பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், முழுவதுமாக சேதமடைந்த மோட்டார் படகுகளுக்கு 7 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண நிதியாக 6000 ரூபாயும், கன்னியாகுமரி, தென்காசி பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.


source https://news7tamil.live/south-district-flood-disaster-chief-minister-m-k-announced-the-relief-stalin.html