முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது என்று கூறியுள்ள ஆளுனர் மாளிக்கை, அரசியல் சாசன எல்லைக்கு உட்பட்டு தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினை, மாநில அரசின் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். அதன் எதிரொலியாக மாலை 5.30 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஆளுநரை சந்தித்தார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
, அமைச்சர்கள் - துரைமுருகன், தங்கம் தென்னரசு, எஸ்.ரெகுபதி மற்றும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களுடன் தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது.
தமிழக ஆளுனரும், தமிழ்நாடு முதலமைச்சரும், மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடி, தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஆளுநர் தமிழக மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எல்லைக்குள் மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஆளுனர், முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்பதன் அவசியத்தையும் நன்மையையும் மாநிலத்தின் பெரிய நலனுக்காக வலியுறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-meet-governor-rn-ravi-in-governor-house-2058660