டிஸ்காம் மின்னஞ்சல் மூலம் விரிவான வரி இன்வாய்ஸ்களை அனுப்பத் தொடங்கியுள்ளதால், தமிழ்நாடு அரசு மின்வாரியமான டான்ஜெட்கோ (Tangedco) பதிவுசெய்யப்பட்ட நுகர்வோர், தங்களின் மின்சாரக் கட்டண விவரங்களைச் சரிபார்க்க, மின் வாரிய அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது தங்கள் டான்ஜெட்கோ கணக்கில் லாக்இன் செய்யவோ தேவையில்லை.
பெயர் மற்றும் முகவரியின் எளிய டெம்ப்ளேட்டிலிருந்து நுகரப்படும் மின்சார யூனிட்களின் அளவு மற்றும் அதற்கான கட்டணங்கள், சமீபத்திய இ.பி. பில்லில் குறிப்பிட்ட மின்சார இணைப்பின் எல்லா விவரங்களும் இடம்பெற்றுள்ளது - அதில் வீட்டு மின் இணைப்பு, வணிக மின் இணைப்பு அல்லது தொழில்துறை மின் இணைப்பு என அனைத்து வகை இணைப்புகளின் விவரங்களும் உள்ளது.
மின் கட்டணம் கணக்கெடுக்கப்பட்ட தேதி, தற்போதை மின் கட்டணம் கணக்கெடுக்கப்பட்ட தேதி, முந்தைய மாத மின் கட்டணம் கணக்கெடுக்கப்பட்ட தேதி, விரைவாக மின் கட்டணம் செலுத்துவதற்கான QR குறியீடு, நுகர்வோருக்கான உண்மையான கட்டணம், மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம், ஆகியவை மின் கட்டண பில்லில் இடம் பெற்றிருக்கும்.
“இந்த அமைப்பை மேலும் நுகர்வோருக்கு ஏற்றதாக மாற்றுவதே யோசனை. தொழில்களுக்கு, ஜி.எஸ்.டி கோருவதற்கு இ-இன்வாய்ஸ் கட்டாயம். எனவே, புதிய டெம்ப்ளேட் அந்த வகையில் அவர்களுக்கு உதவும். வீட்டு மின் நுகர்வோருக்கு, கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அதற்கான காரணத்தைச் சரிபார்க்க அவர்கள் தங்கள் கணக்கைத் திறக்க வேண்டியதில்லை. நாங்கள் இ.பி. பில்லை மேம்படுத்தி வருகிறோம், அது இன்னும் விரிவாக இருக்கும்,” என்று டான்ஜெட்கோ மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் மின் கட்டணத்தில் கூடுதல் நடப்பு நுகர்வு வைப்புத்தொகை (ஏ.சி.சி.டி) சேர்க்கப்பட்டதால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு மின்வாரிய மின்கட்டணத்தை நாம் பல்வேறு வழிகளில் கட்டலாம், அதில் நாம் பேடிஎம், கூகுள்பே, போன்பே, மூலமும் தமிழக மின் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நாம் மின் கட்டணத்தை செலுத்தலாம். இந்நிலையில் தற்போது மின் வாரிய பயணாளிகள் பயன்பெறும் வகையில் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது உங்களுக்கு TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே, யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் இன்னும் எளிதாக செலுத்தலாம். குறுஞ்செய்தி இணைப்பைக் கிளிக் செய்யவும் (Click on the SMS link). கீழே உள்ள பெட்டியில் எண்ணை(captcha) உள்ளிடவும் (Enter the number in the box below). கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்க “PAYMENT OPTIONS” கிளிக் செய்யவும். அடுத்து நீங்கள் பண பரிவர்த்தனை செய்யலாம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tangedco-introduces-detailed-e-invoices-for-electricity-bills-2056181