வெள்ளி, 29 டிசம்பர், 2023

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை நாக்பூர் பேரணியில் இருந்து தொடங்கும் காங்கிரஸ்

 2024 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு காங்கிரஸ் தயாராக உள்ளதுஇது கட்சியின் 139வது நிறுவன நாளைக் குறிக்கும் வியாழக்கிழமை மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெறும் பேரணியிலிருந்து தொடங்குகிறது.

நாங்கள் தயார்'

காங்கிரஸ் தனது நாக்பூர் பேரணியை "ஹைன் தய்யர் ஹம் (நாங்கள் தயார்)" என்று குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது என காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேசோனியா காந்திராகுல் காந்திபிரியங்கா காந்திமற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள்தேசிய மற்றும் மகாராஷ்டிரா பிரிவு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முதல்வர்கள் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பேரணி நடைபெறும் இடம் திகோரி நாகா பகுதியில் அமைந்துள்ளதுஇதற்கு ராகுலின் பாரத் ஜோடோ யாத்ராவைக் குறிப்பிடும் வகையில் காங்கிரஸ் "பாரத் ஜோடோ மைதானம்" என்று பெயரிட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் இரண்டாவது தலைநகரான நாக்பூர்நாட்டின் புவியியல் மையமாக கருதப்படுகிறதுவிதர்பா பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.

நாக்பூருடன் காங்கிரஸின் வரலாற்று தொடர்புகள்

நாக்பூருடனான காங்கிரஸின் தொடர்புஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே செல்கிறது.

1920 டிசம்பரில் நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தியின் தலைமையிலான கட்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கான தெளிவான அறைகூவல் விடுத்தது.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொண்டது, அகில இந்திய அளவில் 350 உறுப்பினர்களுடன் வலுப்படுத்த முடிவு செய்தது மற்றும் 15 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியை கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாக அமைத்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு1959 இல் நடைபெற்ற காங்கிரஸின் நாக்பூர் மாநாட்டில் இந்திரா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரான இந்திராவுக்கு அப்போது 41 வயதுஅவரது பெயரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் UN தேபர் பரிந்துரை செய்தார்.

நாக்பூர் எப்போதும் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் சோசலிச சின்னமான ஜெய்பிரகாஷ் நாராயண் தலைமையில் "இந்திரா ஹட்டாவோதேஷ் பச்சாவோ" போராட்டத்தின் போது கூடநாக்பூரில் காங்கிரஸ் தனது களத்தை தக்க வைத்துக் கொண்டது. 1980 முதல் 2019 வரைநாக்பூர் மக்களவைத் தொகுதியில் 19962014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் என பா.ஜ.க.,வால் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

ஆர்.எஸ்.எஸ் தலைமையகம்

ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நாக்பூரில் உள்ளதுஇது 1925 ஆம் ஆண்டில் நாக்பூர் நகரத்தைச் சேர்ந்த மருத்துவர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரால் நிறுவப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பா.ஜ.க மற்றும் பல துணை அமைப்புகளின் சித்தாந்த ஆதாரமாக உள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த மகாராஷ்டிர பா.ஜ.க மூத்த தலைவரும்துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ்ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பா.ஜ.க.,வின் சக்தி இல்லம்” என்று வர்ணித்துள்ளார்.

மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர இயக்கத்தின் முன்னணி விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பின்படி "இந்தியக் கருத்தாக்கத்தை" உரிமைகோர பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் உடன் சித்தாந்தப் போரில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

வாஞ்சித் பகுஜன் அகாடி தலைவரும்பி.ஆர்.அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில், “ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் அனைத்தும் தன்முனைப்பைக் களைந்துகூட்டாக பா.ஜ.கஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். 2024 தேர்தலில் ஒரு முறை சண்டையிடுவதுடன் இதனை கட்டுப்படுத்த முடியாது, "அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மையானது, இது ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க.,வின் மறைக்கப்பட்ட செயல்திட்டமாக உள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அம்பேத்கரின் தீக்ஷபூமி

அக்டோபர் 141956 அன்று தசரா அன்று பி.ஆர் அம்பேத்கர் தனது லட்சக்கணக்கான சீடர்களுடன் புத்த மதத்தைத் தழுவியது இந்த நாக்பூரில் தான். அந்த வரலாற்றுத் தளத்தில் தீக்ஷபூமி என்ற நினைவுச் சின்னம் உள்ளது.

"ஆர்.எஸ்.எஸ் மற்றும் அரசியலமைப்பின் முக்கிய சிற்பி ஆகிய இருவரின் சித்தாந்தங்களை இந்த நகரம் எதிரொலிப்பதால்" சித்தாந்த காரணத்தால் வியாழக்கிழமை பேரணிக்கு நாக்பூரை கட்சி தேர்வு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். அம்பேத்கரின் மரபு மீது உரிமை கோரும் காங்கிரஸ் கட்சியினர்,

ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க "அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதில்" குறியாக இருப்பதாக தங்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தல்

எதிர்நோக்கும் அரசியல் சவால்களைக் கணக்கிடும் அதே வேளையில்நாக்பூரில் இருந்து மாற்றத்திற்கான செயல்முறையைத் தொடங்குவதில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளது.

எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்தி நாக்பூரில் ஒரு பேரணியை நடத்தினார்இது விதர்பாவிலிருந்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வழிவகுத்தது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். கட்சியின் வியாழன் பேரணியும் இதேபோல் நாட்டின் அரசியலில் ஒரு "பெரிய மாற்றத்தை" முன்னறிவிக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு மற்றும் ஷரத் பவார் தலைமையிலான என்.சி.பி பிரிவு அடங்கிய மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.,வுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறுகையில், “பா.ஜ.கஊழல் மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரான அரசியலுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை அனுப்ப விரும்புகிறோம்” என்று கூறினார்.

மத்திய அமைப்புகளை பா.ஜ.க தவறாகப் பயன்படுத்திநாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கி வரும் நிலையில், நாட்டில் பணவீக்கம்வேலையில்லாத் திண்டாட்டம்விவசாய நெருக்கடி ஆகியவை நிலவி வருவதாக நானா படோல் குற்றம் சாட்டினார்.

நாட்டில் நெருக்கடி ஏற்படும் போது​​நாக்பூர் நிலத்தில் இருந்துதான் காங்கிரஸ் போராட்டத்தை அழைக்கிறது. இன்று நாட்டின் ஜனநாயக அமைப்புஅரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது​​இந்த அமைப்புகளை அப்படியே வைத்திருக்க வேண்டியது காங்கிரஸின் பொறுப்பாகும்” என்று நானா படோல் கூறினார்.

நாக்பூர் பேரணி ராகுலின் வரவிருக்கும் பாரத் ஜோடோ யாத்ரா 2.0 யாத்திரையையும் முன்னிலைப்படும். பாரத் நியாய யாத்ரா’ கிழக்கில் மணிப்பூரிலிருந்து மேற்கில் மும்பை வரை ஜனவரி 14 அன்று தொடங்கும்.

உத்தரப் பிரதேசத்தின் 80 இடங்களுக்குப் பிறகு48 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.

1960களில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் சவாலற்ற கட்சியாக இருந்தது. இருப்பினும்அதன் பிரபலம் பின்னர் குறைந்துவிட்டதுஇது குறிப்பாக 1999 க்குப் பிறகு காங்கிரஸ் பிரமுகர் ஷரத் பவார் கட்சியை விட்டு வெளியேறி என்.சி.பி கட்சியை தொடங்கியபோது காங்கிரஸின் புகழ் குறைந்தது.

1999 மக்களவைத் தேர்தலில்காங்கிரஸ் 10 இடங்களை மட்டுமே வென்றதுஅதன் கூட்டணிக் கட்சியான என்.சி.பி 6பாஜக 13 மற்றும் சிவசேனா 15 இடங்களை வென்றது.

2019 லோக்சபா தேர்தலில்காங்கிரஸ் 1 இடத்திலும்என்.சி.பி 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க 23 இடங்களையும்அப்போது பிரிக்கப்படாத சிவசேனா 18 இடங்களையும் கைப்பற்றியது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில்என்.சி.பி மற்றும் சிவசேனா ஆகிய இரண்டும் பிரிந்துஒவ்வொரு போட்டியாளருக்கும் மகாராஷ்டிரா சண்டையை மிகவும் சவாலாக மாற்றியது. மராட்டிய இடஒதுக்கீடு கோரிக்கையையும் மாநில அரசியலை உலுக்கி வருகிறது. உள்கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் ஒற்றுமையாகவே உள்ளது. 2024 தேர்தலில் மாநிலத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவதற்குஇந்த அனைத்து காரணிகளின் மீதும் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் களமிறங்குகிறது.


source https://tamil.indianexpress.com/india/decode-politics-5-reasons-why-congress-is-sounding-lok-sabha-poll-bugle-from-nagpur-rally-2055494