வெள்ளி, 8 மார்ச், 2024

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கொண்ட முதல் ரோபோ டீச்சர் : கேரளா பள்ளியில் அறிமுகம்

 இந்தியாவில் முதல் முறையாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கெ.டி.சி.டி ("KTCT") உயர் நிலைப்பள்ளியில் சிந்தனை திறனுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ-ஆசிரியர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ரோபோ ஆசிரியரின் பெயர் ஐரிஸ். இதை மகேர் லாப்ஸ் இனம் கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது.

மாணவர்களின் கற்றல் அனுபவத்தை செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டு சிறப்பாக முறையில் வழங்க முடியும் என்று இந்த ரோபோவை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. பாடத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்படியும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க தொழில் நிறுவன பிராசசர் மற்றும் ஆண்ட்ராய்டு செயலியின் அம்சங்கள் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரோபோவிடம் கேள்விகளை எழுப்பினால் அதற்கான பதில்களை தரவும் விளக்கங்களைத் தரவும் முடியும். அதே நேரம் கல்வி சார்ந்த தகவல்களையும் எளிதில் இது வழங்கும். ஆசிரியை படிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோ பாதங்களில் உள்ள நாலு வீல்கள் மூலம் நகர்ந்து சென்று மாணவர்களிடமும் உரையாட முடியும். செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் இந்த ரோபோவால்   கைகளை அசைத்துப் பேசவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.


source https://tamil.indianexpress.com/technology/india-first-robo-teacher-introduced-in-keara-school-viral-photos-4307132