செவ்வாய், 3 செப்டம்பர், 2024

BSNL Recharge Plan: பி.எஸ்.என்.எல் ரூ.107 Vs ரூ.153 ரீசார்ஜ் திட்டம்: வேலிடிட்டி, டேட்டா எவ்வளவு? எது பெஸ்ட்?

 BSNL 107 vs 153 Recharge Plan:  

ஜியோ, ஏர்டெல் மற்றும் வி.ஐ போன்ற முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல்  பிரபலமடைந்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் 4ஜி சேவையையும் அறிமுகம் செய்து வருவது பயனர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. 

ஜியோ, ஏர்டெல் பயனர்கள் பலரும் பி.எஸ்.என்.எல்-க்கு மாறி வருகின்றனர். பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது. அதிலும் குறிப்பாக ரூ. 153 மற்றும் ரூ. 107 மாதாந்திர  திட்டம் பற்றி பார்ப்போம். 

பி.எஸ்.என்.எல்  ரூ.107 திட்டம்

 பஎஸ்என்எல் ரூ.107 திட்டம் குறைந்த டேட்டா உபயோகம் உள்ள பயனர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும. இந்த திட்டம் அதன் நீட்டிக்கப்பட்ட 35 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தின் காரணமாக தனித்து நிற்கிறது. 

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதிக்குப் பதிலாக, அனைத்து நெட்வொர்க்குகளிலும் 

200 நிமிட அழைப்புகளை கொண்டுள்ளது.  இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் 3ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறுவார்கள்.

பி.எஸ்.என்.எல்  ரூ.153  திட்டம்

இந்த திட்டத்தின் விலை ரூ.153 மற்றும் அதிக டேட்டா பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங்கை வழங்குகிறது. பயனர்கள் 26ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறுவார்கள் மேலும் 26ஜிபி டேட்டாவுக்குப் பிறகு வேகம் 40கேபிபிஎஸ் ஆகக் குறையும். இந்த திட்டம் 26 நாட்களுக்கு செல்லுபடியாகும்.அதோடு சில ஓ.டி.டி தளங்கள் சந்தாவும் வழங்கப்படுகிறது. 

எது பெஸ்ட்? 

குறைந்த டேட்டா உடன் அதிக வேலிடிட்டி பெற வேண்டும் என்று நினைத்தால் ரூ.107 திட்டம் சிறந்தது. அதே நேரம் டேட்டா ஓ.டி.டி தள சந்தா வேண்டும் என்றால் ரூ.153  திட்டம் சிறந்ததாக இருக்கும். 



source https://tamil.indianexpress.com/technology/bsnl-107-vs-153-recharge-plan-which-is-best-6944087

Related Posts:

  • தெலுங்கானா அரசு உத்தரவு..!! ரமலான் மாத சலுகை: ரமலான் மாத சலுகை: முஸ்லிம் ஊழியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்ரமலான் மாதத்தில் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்..! தெலுங்கானா அரசு உத்தரவு..!… Read More
  • பசு பாதுகாப்பு மையத்தில் நடந்துள்ள மெகா ஊழல்! பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில் 'பசு பாதுகாப்பு மையங்களில் நடைபெற்றுள்ள பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஊழலை வெளிக் கொண்டு வந்துள்ளது ஏசிபி. இது… Read More
  • ஸ்மார்ட் கார்டு ஸ்மார்ட் கார்டுக்கு யாரெல்லாம் இந்த பாரம் கொடுத்திட்டீங்க? குடுக்காதவர்கள் சீக்கிரமா உங்க நியாயவிலை கடையில் பாரம் வாங்கி நிரப்பி கொடுக்கவ… Read More
  • ‪#‎வண்மையாக__கண்டிக்கிறோம்‬ ஹரியானா மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞன், காவி பயங்கரவாதிகளால் தலை வேறாக,உடம்பு பகுதி வேறாக வெட்டி படுகொலை. குறிப்பி… Read More
  • TN தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீமக்கள் தொகை. ------------------ 7,21,38,958ஆண்கள் ----------------------------- 3,61,58,871பெண்கள்---… Read More