வணிக பயன்பாட்டுக்கான 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், வணிகள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், விலை உயர்வின்படி ஒரு சிலிண்டர் ரூ1964.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் சிலிண்டர் விலையையும் மாற்றியமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் சந்தை விலைக்கு ஏற்ப இந்தியாவில் வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றயமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 229 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம் சிலிண்டர் விலையில் மாதந்தோறும் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ61.50 அதிகரித்து ரூ1964.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும், 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-commercial-cylinder-price-update-in-tamil-7376955