நைரோபி உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தம்: இந்தியாவின் இறையான்மை களவாடப்படாமல் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
___________________________________________________
___________________________________________________
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்றுக் கொண்டடிருக்கும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் 10 ஆவது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் சேவை வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழ்நிலை உள்ளது. இந்த ஒப்பந்தங்களின் பல விதிமுறைகள் இந்திய இறையான்மைக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் எதிராக உள்ளன.
இந்திய அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான ஆரம்ப கல்வியையும், உயர் கல்வியையும் வழங்க வழிவகை செய்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தங்களின் விதிமுறைகள் கல்வியை சந்தை பொருளாக்கி எளியவர்களுக்கு எட்டா கனியாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்த உள்ளன.. இந்த ஒப்பந்தத்தினால் அரசு கல்விக்கு வழங்கும் மானியம் மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் உதவித் தொகை ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. .மானியங்கள் ரத்தானால் அரசு கல்லூரிகளும் பல்கலைகழகங்களும் இயங்க முடியாமல் போகும் ஆபத்து உள்ளது.. கல்வி உதவி தொகை ரத்தானால் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களின் உயர் கல்வி கனவு தகர்ந்துக் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் உயர் கல்வியில் பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் நமது நாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் போட்டிப் போடும் நிலை ஏற்படும். உயர் கல்வி முழுமையாக கடைச்சரக்காகி விடும். சர்வதேச பண முதலைகள் கல்வியை மூலபொருளாக்கி கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்வதுதான். சர்வதேச பண முதலாளிகள் தங்களுடைய பண முதலீட்டை பாதுகாக்கும் விதத்தில் சட்ட பாதுகாப்பும் இந்த ஒப்பந்தங்கள் வழங்குகின்றன.இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குளை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க இயலாது என்பதும் சர்வதேச நீதிமன்றங்கள் தான் விசாரிக்கும் என்பது இந்த ஒப்பந்தங்கள் எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் உணரலாம்.
.
நாடாளுமன்றத்தில் போதிய விவாதம் நடத்தாமல் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்துயிட மோடி அரசு முற்படுவது நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு எதிரானதாகும்.மேலும் இந்த ஒப்பந்தங்களின் விதிமுறைகள் மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும்போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் கையெழுத்திட துடிப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
.
நாடாளுமன்றத்தில் போதிய விவாதம் நடத்தாமல் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்துயிட மோடி அரசு முற்படுவது நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு எதிரானதாகும்.மேலும் இந்த ஒப்பந்தங்களின் விதிமுறைகள் மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும்போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் கையெழுத்திட துடிப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
போராடிப் பெற்ற சுதங்திரத்தை அடகுவைக்கும் அடிமை சாசனம் தான் இந்த ஒப்பந்தங்கள்.இதில் கையெழுத்திடுவதில் இருந்து இந்திய அரசு விலக வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
(ஒப்பம்) எம். எச். ஜவாஹிருல்லா