






















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் உத்தரவுக்கு இணங்க சென்னை மாநகரின் குப்பைகளை அள்ளி TNTJ தொண்டர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
தூய்மை இந்தியா என்ற பெயரில் 7 இலைகளுக்கு ஒரு விளக்கமாற்றில் தூய்மை செய்வது போல் மீடியாக்களை வைத்துக்கொண்டு பாஜக படம் காட்டியதுப்போன்ற படம் அல்ல...
எந்தவித விளம்பரமும் இல்லாமல் உளவுத்தூய்மையுடன் சென்னை மாநகரை தூய்மை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
முதலாவதாக மீட்புப்பணி, இரண்டாவதாக நிவாரண பணி, மூன்றாவதாக தூய்மைப்பணியில் இறங்கியுள்ளனர்.
அரசாங்கம் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் தவ்ஹீத் ஜமாஅத் செய்து கொண்டிருக்கிறது.
இந்த சமுதாயம் குப்பைகளை அள்ளக்கூடிய சமுதாயமா ?
தன்னுடைய ஆடையில் துளி அழுக்கு இல்லாமல் கண்ணியமான முறையில் ஆடை உடுத்தும் ஓர் சமுதாயம் சாலைகளிலுள்ள குப்பைகளை சமுதாய நன்மைக்காக, நோய் தொற்றிவிடக்கூடாது என்று அள்ளி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக இரத்ததானத்தில் மாநிலத்திலேயே தொடர்ந்து முதலிடம் இருந்துவரும் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
இரும்புகோட்டையை விட உறுதியான கொள்கையும், ராணுவத்திற்கு நிகரான கட்டுக்கோப்பும், மனிதநேயத்தில் விண்ணை முட்டும் தியாகமும் TNTJ வினரின் இரத்தத்தில் ஊறியுள்ள முக்கிய அம்சங்களாகும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஒரு விசயத்தில் இறங்கிவிட்டால் புயலே அடித்தாலும் பின்வாங்க மாட்டார்கள் என்ற வரலாறு 2015 மழை வெள்ள பாதிப்பிலும் நிரூபணம் ஆகியுள்ளது.
ராணுவத்தில் இணைந்து தேசத்திற்கு உழைக்க விரும்பினோம், கல்வியும் இட ஒதுக்கீடும் இல்லாததால் ராணுவத்தால் புறக்கணிக்கப்பட்டோம்.
அதனால் ராணுவத்திற்கு நிகரான TNTJ வில் இணைந்தோம், அதனால் நாட்டிற்கும் உழைக்கிறோம், எங்கள் சமுதாயத்திற்கும் உழைக்கிறோம் என்று குப்பை அள்ளும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.