செவ்வாய், 27 ஜூன், 2017

உத்தரபிரதேசத்தில் தமிழக தம்பதியர் சுடப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சோகம் June 27, 2017

உத்தரபிரதேசத்தில் தமிழக தம்பதியர் சுடப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சோகம்


உத்தரபிரதேசத்தில் மர்ம நபர்களால் சென்னை தம்பதியர் சுடப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்தார்.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் விஜய லஷ்மி ஆகிய இருவரும் புதுமணத் தம்பதியர் ஆவர். இவர்கள் இருவரும் தங்களது நண்பர் ஷியாம் தேஜாவுடன் ஹரித்துவாரில் சாமி தரிசனம் மேற்கொண்டு விட்டு டெல்லிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் வாடகை மோட்டார் சைக்கிளில் திரும்பினர். 

முசாஃபர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் மனைவி விஜயலஷ்மி லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், கணவர் ஆதித்யா கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மீரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் இருவரையும் யார் எதற்காக சுட்டார்கள் என்பது குறித்து இது வரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் மீரட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் ஆதித்யா சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இவர் சென்னையில் எல் அண்டி டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • மரபணு மாற்றம் மரபை மீறும் மரபணு மாற்றம் :அச்சத்தில் விவசாயிகள்  1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம்… Read More
  • இலவசமாகப் படிக்கலாம்! விண்வெளி தொழில்நுட்பப் படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம்! விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிட… Read More
  • அம்பலமாகும் ரகசியங்கள் அம்பலமாகும் அரண்மனை ரகசியங்கள் விக்கிலீக்ஸ் வீசும் வெடிகுண்டுகள்! அமெரிக்கா வெளிவிவகாரத்துறைக்கு உலகெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவ… Read More
  • கைது செய்யப்பட்டது தவறானது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற இடதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவரை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார் என்று கூறி தேசி… Read More
  • குகை தோழர்கள் ::: அஸ்ஹாபுல் கஹ்ஃபு -  குகை தோழர்களை அல்லாஹ் உறங்க வைத்த குகை. இக்குகை ஜோர்டான் நாட்டின் தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில்… Read More