செவ்வாய், 27 ஜூன், 2017

வானதி ஸ்ரீனிவாசனின் காரை வழிமறித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்! June 26, 2017

சென்னை திருவல்லிக்கேணி அருகே பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனின் காரை வழிமறித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனுக்கு சொந்தமான கார் திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் சென்றுகொண்டிருந்தது. காரில் ஓட்டுநர் கோபி சரவணன் என்பவர் மட்டும் இருந்த நிலையில், 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்துள்ளனர். 

மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக முழக்கமிட்ட அவர்கள், பின்னர் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து ஓட்டுநர் கோபி சரவணன் அளித்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts: