செவ்வாய், 27 ஜூன், 2017

அக்கம் பக்கத்தினரிடம் பணம் திரட்டி மரத்தை காப்பாற்றிய சிறுவர்கள்! June 27, 2017

அக்கம் பக்கத்தினரிடம் பணம் திரட்டி மரத்தை காப்பாற்றிய சிறுவர்கள்!


பெங்களூருவில் பழமை வாய்ந்த மரத்தை காப்பாற்ற 2 சிறுவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

பெங்களுரூவில் சாக்கடை திட்ட பணிக்காக பழமை வாய்ந்த மரம் ஒன்றை வெட்ட அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு 9 வயதான பார்த் மற்றும் 7 வயதான அர்ஜூன் ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஆனால் அந்த மரத்தில் பல பறவைகளும், அணில் மற்றும் சில சிறிய விலங்குகளும் வசித்து வந்துள்ளன. இந்த மரத்தின் மீது பாசம் கொண்ட சகோதரர்கள் இருவரும் அதனை காப்பற்றுவதற்காக மரத்தைக் கட்டிபிடித்தபடி போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் மரத்தை காப்பாற்ற 25 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படுவதாக கூறியுள்ளனர். 

இதனால் சிறுவர்கள் இருவரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பணம் திரட்டி 7 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர். சிறுவர்களின் அக்கறையை கண்டு வியந்த குடியிருப்புவாசிகள் மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு சாக்கடை திட்டத்தை செயல்படுத்தினர். 

சிறுவர்களின் இந்த செயலைப் பார்த்த பலர் அவர்களை பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சிறுவர்களின் செயல்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.