செவ்வாய், 27 ஜூன், 2017

வலுக்கும் கூர்காலாந்து போராட்டம்! June 27, 2017

வலுக்கும் கூர்காலாந்து போராட்டம்!


கூர்க்காலாந்து தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி,  உடலில் டியூப் லைட்டை உடைத்து போராட்டக்காரர்கள் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

டார்ஜிலிங்கில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் சட்டையின்றி நின்ற நிலையில், அவர்கள் மீது டியூப் லைட்டை உடைத்து போராட்டம் நடத்தினர். தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் 19வது நாளாக இன்றும் தொடர்ந்தது. கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்ச கட்சியின் சார்பில் நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு அம்மாநில மக்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு பெருமளவில் இருப்பதால் போராட்டத்தின் இன்றும் அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.