இன்று,
கவர்னர் : ''சரி, நீ இனிமேல் இந்த மாதிரி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடு. உன்னை விடுதலைப் செய்யச் சொல்லுகிறேன்.''
வாளாடி பெரியசாமி(14 வயது) : ''இல்லை, மறுபடியும் என் தலைவர் பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத்தச் சொன்னால் மீண்டும் கொளுத்தி விட்டு சிறைச் சாலைக்குத் தான் வருவேன்''
இப்படி சொன்ன அந்த வீரன் வாளாடி பெரியசாமி அதே சிறையில் சிறைக்கொடுமை தாங்காது வீரச்சாவடைந்த நாள் இன்று 22.12.1958.
1957 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு பல தோழர்களுடன் இலால்குடிக்கு அருகில் உள்ள வாளாடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பெரியசாமி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் தண்டிக்கப் பட்டான். அப்பொழுது கவர்னராக இருந்தவர் விஷ்ணுராம் மேதி. சிறைச்சாலையை சுற்றிப் பார்க்க வந்தார். அவர் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகை யில், 14 வயது சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டி ருக்கின்றானே, என்ன குற்றம் செய்தான் என்று அழைத்துக் கேட்டார். கவர்னர் ஆங்கிலத்தில் கேட்க அதைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிறுவனிடம் அதிகாரிகள் சொன்னார்கள்.
கேட்ட கேள்வியும் வாளாடி பெரியசாமி சொன்ன பதிலும் மேலே !