செவ்வாய், 22 டிசம்பர், 2015

தமிழக அரசும் காவல்துறையும் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை உடனே கைது செய்

நெல்லை ஏர்வாடியில் இஸ்லாமிய சகோதரர் காஜா முஹைதீன் நேற்று (21-12-2015) இரவு வெட்டி படுகொலைச் செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்றுவரும் இது போன்ற வன்முறைகளை காவல்துறையும், அரசும், ஊடகங்களும் கண்டுகொள்வதே இல்லை. வெள்ள நிவாரணப்பணியில் இஸ்லாமிய இயக்கங்கள் சிறந்த மனித நேயப்பணி செய்ததன் காரணத்தினால் நிலை குலைந்திருந்த பிரிவினைவாத சக்திகளின் சகிப்புத் தன்மையற்ற செயலாக இதை பார்க்கலாம்.
தமிழக அரசும் காவல்துறையும் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைந்து இதற்காக போராட வேண்டுமென்று ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் கேட்டுக்கொள்கிறது.
JAQH மாநில தலைமையகம்.

Related Posts: