செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 22, 2015, 13:24
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு இன்று (22-12-2015) திருச்சியில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானங்கள்
1. தர்கா வழிபாடு , தகடு , தாயத்து, பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரானவை, இறைவன் மன்னிக்காத பாவமான இணைவைப்பைச் சார்ந்தவை. எனவே, இப்பெரும் பாவத்திலிருந்து அனைத்து மக்களும் மீள வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
2. இணைவப்பு எனும் ஷிர்க்கை ஒழிப்பதற்காக வரக்கூடிய 201`6 ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் இன்ஷா அல்லாஹ் இலட்சக்கணக்கான மக்கள் திரள உள்ளனர். இதில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளச் செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்வீரர்கள் அனைவரும் தீவிர களப்பணியாற்ற இச்செயற்குழு கேட்டுக்கொள்
கின்றது
கின்றது
3. சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான கணக்கீடு தமிழக அரசு சார்பில் வீடுவீடாகச் சென்று கணக்கிடப்பட்டு வருகிறது. வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் இழந்து வாடுவோரில் குடிசை இழந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அவர்கள் அடைந்த அதிக அளவிலான பாதிப்பை கவனத்தில் கொண்டு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணத்தொகையாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வீடுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டது போல் வெள்ள நீர் கடைகளுக்குள் புகுந்ததால் வியாபார பொருட்கள் நாசமடைந்து வியாபாரம் செய்ய முடியாமல் சிறு வணிகர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீடுகளில் உள்ள பொருட்களை இழந்ததைவிட இந்த வணிகர்கள் கூடுதலாக பல பொருட்களை இழந்து பெரும் நஷ்டமடைந்துள்ளனர். அவர்கள் அடைந்த நஷ்டத்தை கவனத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து வாடும் அந்த ஏழைச் சிறு வணிகர்களின் துயர் துடைக்க மாநில அரசு ஒரு கடைக்கு குறைந்தபட்சம் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கோரிக்கை விடுக்கின்றது.
4.பூரணமதுவிலக்கு
மதுபானங்களும், இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும், கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டை குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.
இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்ல முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும்,நிம்மதியும், ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தச்செயற்குழு வற்புறுத்துகிறது.

மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
5. கல்வி , வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் பின் தங்கியுள்ள இஸ்லாமிய சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டை அதிக படுத்தி தருவேன் என கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் கூறியிருந்தார்., அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது அடுத்த தேர்தலை சந்திக்க விருக்கும் இந்நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. சர்ச்சார் மற்றும் ரங்கநாத்மிஸ்ரா கமிசனின் பரிந்துரையின் படி மத்தியில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
6.. புதுவையில் இடஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து. தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின் புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் இரண்டரை சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் இன்னொரு பகுதியில் அறவே இட ஒதுக்கீடு இல்லை எனவும் அறிவித்தது. இது ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் ஆகிறது. புதுவை அரசின் இந்த துரோகத்தை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

7. வக்ஃபு வாரியத்தை முற்றாகக் கலைக்கக்கோரி
கிறித்தவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் கிறித்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. அதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும், சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என மாநில மத்திய அரசுகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
உள்ளூர் ஜமாஅத்துகள் வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்தால் மட்டுமே வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

8.டெல்லியில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவி நிர்பயாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலைக்குற்றவாளி ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியாகததால் அவன் பச்சிளம் சிறுவன் என்றும், எனவே 3ஆண்டுகளில் அவனை சிறார் என்ற அடிப்படையில் விடுதலை செய்ததோடு அவனுக்கு 10ஆயிரம் ஊக்கத்தொகையுடன், தையல் மிஷின் வழங்க வேண்டும் என்ற மோசமான பரிந்துரையும் செய்யப்பட்டிருப்பது நமது நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநியாயமாகும். பருவமெய்திவிட்டாலே அவர்கள் சிறார்கள் அல்ல என்ற அடிப்படையில் சட்டமியற்றி சிறார் என்ற போர்வையில் தவறு செய்துவிட்டு தப்பிக்கும் கொடூரங்கள் குறைய இந்த சட்டதிருத்தம் உடனடித்தேவை என்றும் இச்செயற்குழு மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றது. மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் ரீதியான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் உடனடித்தேவை எனவும் இச்செயற்குழு வலியுறுத்துகின்றது.