செவ்வாய், 1 டிசம்பர், 2015

வலிப்பு நோயா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை


வலிப்பு நோய்க்கு வயது வரம்பே கிடையாது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.
நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும்.
இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ்(fits) மற்றும் எபிலெப்ஸி(epilepsy) என்றும் அழைக்கலாம்.
செய்ய வேண்டியவை
தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும், நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும்.
செய்யக் கூடாதவை
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தக்கூடாது.
சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும்.
நீர்நிலைகளில் நீராடுவது ஆபத்தான ஒன்று.
தேவையற்ற மன உளைச்சல், மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.