அன்பிற்கினிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல் அடியார்களே.!!
ரபீஉல் அவ்வல் மாதமும் ; முஸ்லிம்களும் ...!!!
இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்தில், இஸ்லாமியர்களில் சிலர் 'மீலாது விழா' என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது அந்த 'மீலாதுந்நபி' விழாவுக்கு ' உத்தம நபியின் உதய தின விழா ' என்று புதியதோர் பெயரும் சூட்டப்பட்டு கொண்டாடப்படுகிறது.!
இஸ்லாத்தின் அடிப்படையை சரியாக புரியாதவர்களால் எழுதப்பட்ட 'மவ்லிது' என்ற நூலிலுள்ள பாடல்களை, 'ரபீஉல் அவ்வல்' பிறை ஒன்றிலிருந்து தினமும் மாலை வேளைகளில் பன்னிரெண்டு நாட்கள் பாடி, புண்ணியம் தேடுவதாக 'ஷிர்க்'கென்னும் பாவச் சுமைகளை சேர்த்து முடித்து, கடைசியாக இந்த விழாவினையும் கொண்டாடி கூடுதலாக ஒரு 'பித்அத்'தினையும் செய்து முடிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தவ்ஹீத் பிரச்சாரத்தின் மூலமாக மக்கள் விழிப்புணர்வு பெற்றதால், மீலாத் விழாவும் அதன் பெயரால் நடத்தப்படுகின்ற அனாச்சாரங்களும் பல பகுதிகளில் ஒழிந்துக் கொண்டு வந்தாலும், இன்னொரு பக்கம் தூய இஸ்லாத்தை மக்கள் மன்றத்தில் உரக்க சொல்ல வேண்டிய ஆலிம்களின் தலைமையிலேயே இந்த அனாச்சாரம் இன்றுவரை அரங்கேற்றப்பட்டு வருவதால், முழுமையான இஸ்லாமிய சமுதாயத்தையும் அதிலிருந்து மீட்டெடுக்க, சத்திய மார்க்கத்தை அறிந்த நாம் ஒவ்வொரும் கடமைப்பட்டுள்ளோம்.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை.(?)
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம்
கற்றுத்தந்திருக்கின்றது.
இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
கற்றுத்தந்திருக்கின்றது.
இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை.
கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.
கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.
மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது.
மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்து.
எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்னதத்துவம் அடங்கியிருக்கின்றது?
மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு
என்ன இருக்கின்றது?
என்ன இருக்கின்றது?
இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும்.
கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம்
பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
"உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வேறெவரை?" என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456)
எனவே இஸ்லாத்தில் இல்லாத மீலாது விழாவை புறக்கணிப்போம் ..
தூய இஸ்லாத்தை பின்பற்றி நடப்போம் இன்ஷாஅல்லாஹ்