செவ்வாய், 15 டிசம்பர், 2015

#ஊடகபயங்கரவாதிகள்

பேரதிர்ச்சியான செய்தி கசிந்தது. இந்தியா மற்றும் உலகில் மூளை முடுக்குகளில் உள்ள தீவிரவாதிகளின் தலைவர்கள் யார்? யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

கடந்த இரண்டு வருஷங்களாக…
ஒரே முகமூடி நபர் 
பல்வேறு இயக்கப்பெயரில்
பல்வேறு இயற்பெயரில்
நான்கு முறை கைதாகியுள்ளார்.

 #ஊடகபயங்கரவாதிகள்  சொல்வதில் எது உண்மை..?

முகமூடி படத்தை போட்டு…

=>2014 மார்ச் 23 ல்.  ‘#இந்தியன்முஜாஹிதீன் எனும் சந்தேகிக்கப்படும் ஜியா உல் ரஹ்மான் எனும் #வக்காஸ் ராஜஸ்தான்-அஜ்மீரில் கைது’ என்றான் வெளிநாட்டு ஊடகம் #ராய்ட்டர்.
20151214190928 (1) 

அதே முகமூடியின் சைடு படத்தை போட்டு…

==>2014 மார்ச் 26 ல்.  ‘#இந்தியமுஜாகிதீன் இயக்கவாதி  தெஹ்சீன்அக்தார் எனும் #மோனு டெல்லியில் ரிமாண்டில் வைக்கப்பட்டான்’ என்று பெயரையே மாற்றி விட்டான் உள்நாட்டு #இந்தியன்எக்ஸ்ப்ரஸ்.
20151214190928 (3)

அதே முகமூடி படத்தை போட்டு…

===>2015 மே 5 ல்.  ‘கேரளாவில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி #ரூபேஷ்_ஷினா இருவரும் கோயம்புத்தூரில் கைது’ என்கிறான் #இண்டர்நேஷனல்பிசினஸ்டைம்ஸ்.
20151214190928

மீண்டும் அதே முகமூடி படத்தை போட்டு…

====>2015 டிசம்பர் 10 ல், ‘மும்பை விமான நிலையத்தில் #லஷ்கர்இதொய்பா -#ஆசாதுல்லாகான்(வயது57)- தீவிரவாதியை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்’ என்கிறான் #தினத்தந்தி.
20151214190928 (2)

#கேள்விகள் 
1—அந்த முகமூடியில் இருப்பது ஆணா..பெண்ணா..?
2—முகமூடி எந்த இயக்கம்..?
3—எங்கே கைது நடந்தது..?
4—முகமூடியின் உண்மையான பெயர் என்ன..?
5—முகமூடி நபர் இப்போது எங்கே..?
 #ஊடகபயங்கரவாதிகள்