முன்னாள் மாநில தலைவர் (தமிழகம்)
பி.ஜே.யின் இலங்கை வருகைக்கு தடை
பி.ஜே.யின் இலங்கை வருகைக்கு தடை
தென்னிந்திய இஸ்லாமிய பிரசாரகர் பி.ஜெய்னுலாப்தீனின் இலங்கை வருகையை தடை செய்யுமாறு உத்தரவிட்ட பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் மூலமாக தமது அமைப்பு இவ் வழக்கை தாக்கல் செய்ததாக ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 08.11.2015 அன்று கொழும்பில் நடத்தப்பட்ட அல் குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு நிகழ்வுக்கு வருகை தரவிருந்த தென்னிந்திய இஸ்லாமிய பிரசாரகர் பி.ஜெய்னுலாப்தீனுக்கான விசா அனுமதியை கடைசி நேரத்தில் இரத்துச் செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி உத்தரவிட்டமைக்கு எதிராகவே உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பி.ஜெய்னுலாப்தீனின் வருகைக்கான உத்தியோகபூர்வ அனுமதியை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், முஸ்லிம் சமய விவகார அமைச்சு, மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியன முறையாக வழங்கியிருந்தும், ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் தேவைக்காக எவ்வித காரணமும் குறிப்பிடப்படாது பி. ஜெய்னுலாப்தீனுக்கு வழங்கப்பட்ட விசா அனுமதி கடைசி நேரத்தில் பாதுகாப்பு செயலாளரினால் இரத்துச் செய்யப்பட்டது.
எவ்வித உரிய காரணங்களுமின்றி சில அரசியல்வாதிகள் மற்றும் உலமாக்களின் அழுத்தங்களின் பேரில் தன்னிச்சையாக முடிவெடுத்து பி.ஜெய்னுலாப்தீனின் இலங்கை வருகையை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தடுத்து நிறுத்தியதாக தௌஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
பி.ஜெய்னுலாப்தீன் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன் அவரது வருகையை தடை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கடிதம் மூலமாகவும் நேரடியாக சந்தித்தும் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிட ஆத்தக்கதாகும்
