நான் பார்வையிட்ட நேற்றைய முகநூல் பதிவுகளில் Siva Prakash என்ற தோழர், சமீபத்தில் பிடிபட்ட 570 கோடிக்கான விளக்கம் கோரி ஓர் த.அ.உ.சட்ட மனுவினை பதிவு செய்துள்ளார். அதனை 5.2K பேர்கள் லைக் செய்துள்ளனர் 10234 பேர்கள் (இந்த நிமிடம்) ஷேர் செய்துள்ளனர். ஊழலிற்கு எதிரான இந்த தோழரின் ஆர்வமும், அதனை மற்றவர்கள் ஷேர் செய்ததன் ஆர்வமும் மிகவும் வரவேற்கதக்கதானதாக இருந்த போதிலும் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்... அவர் மனுவிற்கான கட்டண தொகையான ரூ.10 கான நீதிமன்ற வில்லை (கோர்ட் ஸ்டாம்ப்) ஒட்டியுள்ளார். அவர் இந்த மனுவினை அனுப்பியுள்ளது பாரத ஸ்டேட் வங்கிக்கு.. இது ஓர் மத்திய அரசு அலுவலகம். மாநில அரசு அலுவலகங்களுக்கு ரூ.10 கான நீதிமன்ற வில்லை (கோர்ட் ஸ்டாம்ப்) ஒட்டுவது ஏற்புடையதே. ஆனால் மத்திய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பும் த.அ.உ.ச.மனுவிற்கான கட்டணத்தினை டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதனை அறியாமல் அவர் அனுப்பியிருப்தையும், அதனை லைக்கும், ஷேர்களும் செய்துள்ள இவ்வளவு ஆயிரம் பேர்களும் அறியாமல் போயுள்ளதனை அறியும் போது சற்று வருத்தமளிக்கின்றது. மனுதாரருக்கு தெரியாமல் போயிருந்தாலும், ஷேர் செய்த ஒருவராவது இதனை அவருக்கு சுட்டிகாட்டியிருக்கலாம்.
ஊழலிற்கு எதிரான நமது போராட்டங்கள் எந்த வகையில் இருந்தாலும், அதன வழி முறைகளையும், அதன் விளைவுகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்வது நம்மை இன்னும் பலப்படுத்தி நமக்கான வெற்றியினை உறுதிபடுத்தும் தோழர்களே. இது யாரையும் குறை சொல்ல பதிவு செய்யப்பட்டதல்ல. உணர்ச்சி மேலீட்டினால் மட்டுமே செயல்படாமல், முழுமையாக சட்டத்தினையும் கற்று கொள்வது நல்லது தோழர்களே.
ஆர்.சையத் பஷீர் (நிறுவன தலைவர்)
ஊழலுக்கு எதிரான அமைப்பு
(Anti Corruption Foundation)
கைபேசி எண்: 9788049912
ஊழலுக்கு எதிரான அமைப்பு
(Anti Corruption Foundation)
கைபேசி எண்: 9788049912