திங்கள், 23 மே, 2016

தமிழக‌ அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களின் பின்னணி

தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா 6-வது முறையாக ஏற்க உள்ளார். ‌அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த இவர் 1991, 2001, 2011 ஆகிய தேர்தல்‌களிலும் வெற்றிபெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Assembly fb
ஆர்கே நகர் தொகுதியிலிருந்து வெற்றி‌பெற்றுள்ள ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்போடு உள்துறை, இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனப் பணி, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை தொடர்ந்து கவனித்துக்கொள்ள உள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிதியமைச்சர் பொறுப்பு மீண்டும் கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் வருவாய்த் துறை, பொது‌ப்பணித்துறை, நிதித் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்த இவர் 2 முறை முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
திண்டுக்கல் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மூத்த அரசியல்வாதியான சீனிவாசன் அதிமுகவில் கடந்த 44 ஆண்டுகளில் மாவட்ட, மாநில அளவிலான பொறுப்புக்களை வகித்துள்ளார். 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்த இவருக்கு வனத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி தொகுதியிலிருந்து‌ வெற்றிபெற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி 1998-ல் மக்களவை உறுப்பினராகவும் 1989, 1991, 2011 ஆ‌ண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த முறை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த இவர் தற்போது பொதுப்பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள செல்லூர் ராஜு மதுரை மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் வகிக்கிறார். கடந்த முறை கூட்டுறவுத் துறையை கவனித்து வந்த இவரு‌க்கு தற்போது அந்த துறையோடு தொழிலாளர் நலத் துறையும் சேர்த்து ஒதுக்‌கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்திலிருந்து வெற்றிபெற்றுள்ள தங்கமணி கடந்த 2‌006 மற்றும் 2011ம் ஆண்டுகளிலும் சட்‌டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை கவனித்து வரும் இவருக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு‌‌ துறை தரப்பட்டுள்‌து.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் இருந்து தேர்வாகியுள்ள எஸ்.பி.வேலுமணி இதற்கு முந்தைய 2 பேரவைத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றவர். சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், சிறைத் துறை உள்ளிட்ட துறைகளை கவனித்த இவருக்கு தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ள D.ஜெயக்குமார், 1991-ம் முதல் 5 முறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆக இருந்தவர். 1991, 2001, 2011-ம் ஆட்சிக் காலங்களில் மீன்வளம், பால்வளம், சட்டம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தார். 2011, 2012-ல் சபாநாயகர் பொறுப்பையும் இவர் வகித்துள்ளார். அனுபவம் மிக்க உறுப்பினர்களில் ஒருவரான ஜெயக்குமார் இம்முறை மீன் வளத்துறை பொறுப்பை கவனிக்க உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரத்திலிருந்து வெற்றிவாகை சூடிய சி.வி.சண்முகம்‌, அடிப்படையில் வழக்குரைஞர் ஆவார். 2001 மற்றும் 2006ல் திண்டிவனத்திலிருந்து வெற்றிபெற்ற இவர் 2011 மற்றும் 2016-ல் விழுப்புரத்திலிருந்து வெற்றிபெற்றுள்ளார். சட்டம், வணிகவரி, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக ஏற்கனவே இருந்த இவர் இனி சட்டம் மற்றும் நீதித் துறையை கவனிக்க உள்ளார்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியிலிருந்து தொடர்ந்து 4-வது முறையாக வெற்றிபெற்றுள்ள கே.பி.அன்பழகன் அதிமுக மாவட்டச் செயலாளராக உள்ளார். 2003-ம் ஆண்டு முதல் 2006 வரை செய்தி மற்றும் உள்ளாட்சித் துறை பொறுப்புகளை கவனித்த அனுபவம் உள்ள இவருக்கு இம்முறை ‌உயர்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து வெற்றிபெற்றுள்ள டாக்டர் சரோஜா மாநில மகளிரணி இணை செயலாளராக இருந்து வருகிறார். 1991-ல் சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ள இவர் பின்னர் ராசிபுரம் மக்களவை தொகுதியின் உறுப்பினராக இருமுறை இருந்துள்ளார். இவருக்கு தற்போது சமூக நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெற்றிபெற்றுள்ள கே.சி.கருப்பண்ணன் 44 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பொறுப்புக்களை வகித்து வருகிறார். 2001-ம் ஆண்டில் பவானி தொகுதியில் வெற்றி பெற்ற இவர் இம்முறையும் அதே தொகுதியில் வென்று முதன்முறையாக அமைச்சராக உள்ளார். இவருக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கடலூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து 2-வது முறையாக தேர்வாகியுள்ள எம்.சி.சம்பத், 2001-ம் ஆண்டில் நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2001-ல் உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதித் துறையை கவனித்த இவர் 2011 ஆட்சிக் காலத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை பொறுப்பை கவனித்துவந்தார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கும் இவருக்கு தற்போது தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றுள்ள ஆர்.காமராஜ் ‌2001-ம் ஆண்டு முதல் 2007 வரை மாநிலங்களவை உறுப்பினர் ஆகவும் கொறடாவாகவம் இருந்துள்ளார். 2011-ல் நன்னிலம் தொகுதியில் வெற்றிபெற்று உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை பொறுப்பை கவனித்த இவருக்கு தற்போது அதே துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொடங்கப்பட்ட காலத்தி‌லிருந்து அதில் இருந்து வரும் ஓ.எஸ்.மணியன் இந்த தேர்தலில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றுள்ளார். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள இவர் முதன்முறையாக அமைச்சர் பொறுப்பை ஏற்கும் இவருக்கு ஜவுளி மற்றும் கைத்தறித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ‌உடுமலைப் பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கே.ராதாகிருஷ்ணன் கோவை மாவட்ட இளைஞ‌ரணி செயலாளர், திருப்பூர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியத் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். தற்போது திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார். முதன்முறையாக அமைச்சராக உள்ள இவருக்கு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையிலிருந்து வெற்றிபெற்றுள்ள சி.விஜயபாஸ்கர், மாநில மாணவரணி செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களை வகித்தவர். 2 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2013 முதல் 2016 வரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமை‌ச்சராக இருந்தார். மருத்துவரான இவருக்கு தற்போதும் மக்கள் நல்வாழ்வுத் துறையே ஒதுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற சண்முகநாதன் அம்மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளா‌ர். 2001, 2011-ம் ஆண்டுகளில் வெற்றிபெற்று அமைச்சரான இவர் அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொறுப்புகளை கவனித்துள்ளார். தற்போது அவருக்கு பால் வளத் துறை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலிருந்து வெற்றிபெற்றுள்ள துரைக்கண்ணு ‌அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினர். 2006, 2011 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருந்த இவர் தற்போது பா‌பநாசம் ஒன்றிய ‌செயலாளராக உள்ளார். முதன்முறையாக அமைச்சராகும் இவருக்கு வேளாண்மை மற்றும் கால்நடைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடம்பூர் ராஜு அம்மாவட்டத்தின் ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். 2011-ல் இதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன ராஜுவுக்கு இம்முறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. செய்தி மற்றும் விளம்பரத் துறை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.பி.உதயகுமார் தற்போது ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராக உள்ளார். 2011-ல் சாத்தூர் தொகுதியில் வெற்றிபெற்று அமை‌ச்சராக இருந்தார். தற்போது அவருக்கு வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற ராஜேந்திர பாலாஜி 1991-ம் ஆண்டிலிருந்து மாவட்டச் செயலாளர் உட்பட கட்சியின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது அவருக்கு ஊரகத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை‌தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற கே.சி.வீரமணி வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். 2011-ல் எம்எல்ஏ ஆன இவர் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு தற்போது வணிகவரித் துறை கிடைத்துள்ளது.
பா.பெஞ்சமின் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார். 2011-ல் சென்னை மாந‌கராட்சி மாமன்ற உறுப்பினராக தேர்வான இவர் பின்னர் துணை மேயராகவும் நியமிக்கப்பட்டார். இவருக்கு ‌பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டப்பேரவையில் நுழைய உள்ளார் வெல்லமண்டி நடராஜன். ‌திருச்சி நகரக் கூட்டுறவு வங்கி, திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பதவிகளையும் இவர் வகிக்கிறார். தற்போது இவருக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
‌திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தொடர்ந்து 2-வது முறையாக வெற்றிபெற்றுள்ள வ‌ளர்மதி 1983-ல் அதிமுகவின் அடிப்படை உறுப்‌பினராக சேர்ந்தவர். மாவட்ட அளவில் மாணவரணி, மகளிரணி பொறுப்புக்களை வகித்துள்ள இவர் ‌கட்சியின் அமைப்புச் செயலாளர்களி‌ல் ஒருவராகவும் உள்ளார். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத் துறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டுள்ளா‌ர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோய‌ல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வி.எம்.ராஜலட்சுமி தற்போதைய பேரவையில் குறைந்த வயதுள்ள அமைச்சர் என்ற பெயரையும் பெறுகிறார். 30 வயதான இவர் தற்போது சங்கரன் கோயில் நகர்மன்றத் தலைவியாக உள்ளார். ஆதிதிராவிடர் நலன் மற்றும்‌ பழங்குடியினர் நலன் துறை அமைச்சராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதிய‌ல் வெற்றி‌பெற்றுள்‌ டாக்டர் மணிகண்டன் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் ஆவார். மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளராக உள்ள இவருக்கு தகவல் தொழில் நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சியில் மாவட்ட அளவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். ஒன்றியக் குழு உறுப்பினராகவும் 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.