பெங்களூரு –வினித் விஜயன், தற்செயலாக இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார். இந்த ஆட்டோ டிரைவர் பெயரில்லாத ஹீரோ என்று அழைக்கப்படுகிறான். நாட்பட்ட முதுகுவலிக்கு அவதிப்பட்டு வந்த விஜயன் ஆஸ்பத்திரிக்கு செல்ல காத்திருக்கும் வேளையில், இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார் . மெதுவாக செல்லும்படி கேட்டுகொண்டார்.
அதற்கு ஒரு மென்மையான குரலில் ஒரு ' சரி ஐயா என பதில் வந்தது. அவர் கடந்த காலத்தில் அவர் அதே கேள்வியை கேட்டு, பல ஆட்டோ டிரைவர் மூலம் ஒரு முரட்டுத்தனமாக பதில் வந்ததை நினைத்துப்பார்த்தார்.
மருத்துவமனையை அடைந்ததும் எவ்வளவு கொடுக்கவேண்டும் என கேட்டதற்கு , இந்த ஆட்டோ ஓட்டுனர் தனது இருக்கைக்கு அருகில் இருந்த அருகில் ஒரு நன்கொடை பெட்டியில் சுட்டிக்காட்டி, நீங்கள் இந்த சவாரிக்கு எவ்வளவு கொடுத்தால் திருப்திகரமாக இருக்கும் என நினைக்கிறீர்களோ அதை போட்டால் போதுமென பதில் வந்தது.
ஆட்டோவை முன்வாயிலிருந்து வெளியெற்றக்கூரி விரைந்து வந்த பாதுகாவலர், இந்த ஆட்டோ டிரைவரை கண்டதும் , வரவேற்றுவிட்டு சென்றதை கண்டதும் ஆச்சரியத்துடன் ஆட்டோ ஓட்டுனரை பற்றி பாதுகாவலரிடம் விசாரித்ததற்கு , “அவர் இந்த மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் மற்றும், அந்த ஆட்டோ , அந்த மருத்துவ நிறுவன கண்காணிப்பாளர் அவருக்கு மருத்துவ படிப்பிற்கு ஆகும் செலவை அதன் மூலம் வருமானத்தில் கட்டிகொள்வதர்காக பரிசாக அளித்துள்ளது என்று பதிலளித்தார்”.
அவரது தந்தை சிறிது காலம் முன் இறந்துவிட்டார், மற்றும் வாத நோயினால் கிடக்கும் ஒரு மூத்த சகோதரர் மற்றும் வீட்டில் இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர். அழகான அந்த பையன், இப்போது மருத்துவ கல்லூரிக்கு இலவச சவாரிகள் வழங்க தனது வாகனத்தை பயன்படுத்துகிறார். அவர் தனது வாடிக்கையாளர்கள் எந்த கட்டணம் வசூலிப்பதில்லை.ஆனால் அவர் நன்கொடை என சேரும் பணத்திலிருந்து, இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக
செலவிடுகிறார்.
சூப்பர் ஹீரோக்கள் இவரைப்போன்ற போன்ற எளிய மக்கள்தான் ஆனால் ஒரு பெரிய இதயம் கொண்ட சாதாரண மக்கள்தான் என்பதை , இந்த ஆட்டோ ஓட்டுனரின் கதை நம் எல்லோருக்கும் நினைவூட்டுகிறது!
வாழ்த்துவோம் இவரின் மதிப்பில்லா… பரந்த சமூக சேவையினை…