உதகை தாவரவியல் பூங்காவில் வரும் 27ம் தேதி 120வது மலர் கண்காட்சி தொடங்குவதை அடுத்து அலங்கார மேடைகளில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் நேரத்தில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். தற்போது கோடை சீசன் களைகட்டி உள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
வரும் 27 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால் அதில் வைப்பதற்காக 194 ரகங்களில் பயிரிடப்பட்ட லில்லியம், இன்கா மேரிகோல்ட், பெட்டுன்னியா, பால்சம், க்ரைசாந்திமம், உள்ளிட்ட பல மலரினங்கள் பூத்து குலுங்குகின்றன.
இதனை தொடர்ந்து அலங்கார மேடைகளில் சுமார் 15,000 மலர் தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபப்ட்டுள்ளன.