செவ்வாய், 31 மே, 2016

இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஓங்கச்செய்யும் அடுத்த தலைமுறை...




ஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்!
கர்நாடகாவில் உள்ள ஸஹீன் கல்லூரியில் படித்து வருபவர் வசனஸ்ரீ பாடீல். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் CET சிஇடி மருத்துவ துறையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற வெற்றியை தங்களின் வெற்றியாக எண்ணி குதூகலிக்கும் இஸ்லாமிய பெண்களை பாருங்கள். சாதி, மதம், இனம் கடந்த கள்ளம் கபடமற்ற உளப் பூர்வமான மகிழ்ச்சி. இவ்வாறு அண்ணன் தம்பிகளாவும் அக்கா தங்கைகளாகவும் பழகி வரும் சமூக சூழலில் ஆட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக சமூகத்தில் பேதங்களை வளர்த்து வரும் இந்துத்வாவையும் பார்க்கிறோம்.
அன்பையும் சமாதானத்தையும் விரும்பும் மக்கள் இரண்டு மதங்களிலும் பெரும்பான்மையோராக உள்ளனர். இந்த பெரும்பான்மை இருக்கும் காலமெல்லாம் எனது நாடு பாசிச சக்திகளுக்கு இடம் கொடுக்காது. பாசிச சக்திகளின் வர்ணாசிரம எண்ணமும் நிறைவேறப் போவதில்லை.

@suvanapriyan