கடல் ஆராய்ச்சிக்கான 7வது ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள் வரும் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார், 1,425-கிலோ எடைகொண்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி என்கிற அந்த செயற்கைகோள், கடல்ஆராய்ச்சிக்கான ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள்கள் வரிசையில் 7வது மற்றும் கடைசி செயற்கைகோள் எனத் தெரிவித்தார்.
வரும் 28ந்தேதி பகல் 12.50 மணிக்கு இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள் வரிசையில் 6வது செயற்கைகோள் கடந்த மாதம் 10ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.