சனி, 21 மே, 2016

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சமாக யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஓட்டளித்துள்ளனர். நோட்டாவுக்கு அளிக்கப்பட்ட இந்த ஓட்டுகள் எழுப்பியுள்ள கேள்விகளை அலசுகிறது இந்த தொகுப்பு.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 5 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் அதிக வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இந்த முறை அதிக அளவில் முதல்முறை வாக்காளர்கள் இருக்கிறார்கள், அதிக பெண் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர் என்றெல்லாம் தகவல் வந்த நிலையில் நோட்டாவுக்கும் கணிசமான அளவில் வாக்குகள் போயிருப்பதற்கு சரியான புரிதல் இல்லாமையா? எந்த வேட்பாளர் மீதும் நம்பிக்கையில்லையா? என பல கேள்விகள் எழுகின்றன. இதுபற்றி தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இதற்கு முன்பாக நடந்த தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு 49 ஓ என்ற படிவம் அளிக்கப்பட்டது என்று நினைவு கூர்ந்த முன்னாள் தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நோட்டாவுக்கு கணிசமான வாக்குகள் விழுந்தால் அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்றார்
அரசுதான் நோட்டா ஓட்டுகள் பற்றி முடிவெடுக்க முடியும் என்றாலும், தகுதியான வேட்பாளரை தேர்வு செய்தல் நல்லது என்கிறார் நரேஷ் குப்தா.
சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டா பெற்றுள்ள கவனம்,அடுத்தடுத்த தேர்தல்களில் எப்படி திசைமாறும் என்று பார்க்கலாம்.