திங்கள், 23 மே, 2016

பூமியைப் போன்ற 3 கோள்கள்: விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

பூமியைப் போன்றே மனிதர்கள் வாழ ஏதுவான 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Palnet
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப் போன்றே உயிர்கள் வாழ ஏதுவான சூழலியைக் கொண்ட 3 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பெல்ஜியத்தைச் சேர்ந்த லீஜ் பல்கலைக் கழகப் பேராசிரியரும், விஞ்ஞானிகள் குழுவின் தலைவருமான மைக்கேல் கில்லியன், இந்த 3 கோள்கள் பூமியில் இருந்து சுமார் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகத் தெரிவித்தார். சூரியக் குடும்பத்தின் அமைப்பைப் போலவே, அந்த மூன்று கோள்களும் அவற்றின் மையக் கோளை சுற்றி வருவதாகவும், இதற்காக அவைகள் 1.5 முதல் 2.4 நாட்கள் வரை எடுத்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்ட வெளியில் உயிர்கள் வாழும் ஒரே கோள் பூமி என்ற கோட்பாட்டை உடைக்கும் விதமாக கண்டுபிடிகப்பட்ட இந்த கோள்கள், பூமி தவிர மற்ற கோள்களிலும் உயிர்களும் வாழ வாய்ப்புகள் உள்ளது என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது.