நெல்லை மாவட்டத்தில் உள்ள மானுார் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மானூர் பெரியகுளம் சுமார் 1,120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்து நீர் மூலமாக சுமார் 1,000 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், இந்த குளத்தில் குத்தகை மூலம் மீன் வளர்ப்பு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரில் ஏதேனும் நச்சு பொருட்கள் கலந்திருக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இறந்த மீன்களை அப்புறப்படுத்தவும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.