தீவிர மதவாதம் மற்றும் சிறுபான்மை, தலித்ததுகளுக்கு எதிரான வன்முறையோடு தொடர்புடைய இயக்கமாகக் கருதப்படுவதால் இந்து முன்னணி மற்றும் இந்துத்வா சார்புடைய இயக்கங்களின் மேடைகளில் தமிழகத்திலுள்ள பா.ஜ.க.வைத் தவிர்த்த 90% அதிகமான இயக்கங்கள் பங்கு கொள்வதில்லை. மக்களிடையே பிரிவினையை குறிகோளாக வைத்து ஆதாயம் பெற முயலும் இந்த இயக்கங்களுக்கு அடிப்படை கொள்கையையும் வழிமுறையையும் உருவாக்கியவர்கள் சாவர்கர், R.S.S. நிறுவனர் ஹெட்கேவார் மற்றும் அதன் நீண்ட காலம் தலைவராகயிருந்த கோல்வார்கர் போன்றவர்கள். இந்து முன்னணியின் கூட்டத்தில் இவர்களின் படத்தின் முன் நின்று வாழ்த்தி பேசும் காதர் முகைதீனின் செயல்பாடுகளை அவரின் சில தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
இவைதான் “சமுதாயத் தலைவர்” “கவ்மின் காவலர்” “வாழும் காயிதே மில்லத்” “தாய் சபைத் தலைவர்” என்று அவர்கள் அழைப்பதற்குத் தகுதியானவைகளா?
“திருக்குர்ஆனின் வசனத்திற்கு யாரும் சொல்லாத அழகிய அர்த்தத்தை, அழகிய தெளிவுரையைச் சொன்ன உங்களை எங்களுடைய மவுலானாக்களுக் கெல்லாம் மவுலானாவாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்னைப் பொறுத்தவரை எங்களுடைய ஆன்மீக குருவாக தங்களை ஒப்புக்கொள்கிறேன்”.
(முரசொலி 20.1.2004 கட்சியின் பொதுக்குழுவில் கலைஞர் கருணநிதியை அழைத்து பேசியது).
இதைப் போன்று இன்னும் பல……...



இவருடைய மார்கத்துக்குப் புறம்பான பேச்சுக்கள் மற்றும் தன் இயக்கத்தைப் பற்றி தானே கொடுத்துள்ள வாக்கு மூலங்களை இன்ஷா அல்லாஹ் பதிவிட வேண்டிய அவசியம் உள்ளதால் பதிவிடுகிறேன்.