திங்கள், 7 மார்ச், 2016

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!

அதிகளவு பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்பினை சில வகையான கைப்பேசிகளில் பயன்படுத்த எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைப்பூவின் ஊடாக (Blogpost) தெரிவிக்கப்பட்ட இந்த தகவலின் அடிப்படையில் பிளாக்பெரி மற்றும் நோக்கியா கைப்பேசிகளிலேயே இவ்வாறு எதிர்காலத்தில் குறித்த சேவையை பயன்படுத்த முடியாது போகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
images (1)
இவை தவிர Nokia S40, Nokia Symbian S60 கைப்பேசிகள் உட்பட Android 2.1 மற்றும் 2.2, Windows Phone 7.1 ஆகிய இயங்குதளங்களில் செயற்படும் கைப்பேசிகளிலும் வாட்ஸ்அப் அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது போகும் எனவும், இவற்றில் போதியளவு வசதிகள் காணப்படாதமையே காரணம் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பயனர்களை புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துமாறு வாட்ஸ்அப் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts: