
பில்லூர் அணையிலிருந்து பத்தாயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று மீண்டும் 97 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு வரும் பத்தாயிரம் கனஅடிநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்பட ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.