
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால், கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், கேரளா மற்றும் கடலோர கர்நாடகா ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.