வியாழன், 9 ஆகஸ்ட், 2018

​கன்னியாகுமரியில் கனமழை; ரப்பர் பால் எடுக்கும் தொழிலாளர்களின் வேலை பாதிப்பு! August 9, 2018

Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ரப்பர் மரங்களில் பால் எடுக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. 

இதனால், கீரிப்பறை, காளிகேசம், மனலோடை, பரளியாறு உள்ளிட்ட பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குமாரி மாவட்டத்தில் இந்த தொழிலை நம்பியுள்ள அரசு மற்றும் தனியார்  தோட்டங்களில் சுமார் 3000க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள்  இன்று பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ரப்பர் தோட்டங்களில் நாளொன்றுக்கு சுமார்  25 லட்சம்  ருபாய் இழப்பு  ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.