அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுகவின் சட்டமன்ற தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது, மத்திய அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன், சசிகலா தமிழக முதல்வராகனும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய ட்வீட்டரில் பதிவு செய்திருந்தார்.
சசிகலா, முதலமைச்சராக பதவியேற்கும் பணிகளை அதிமுக வட்டாரங்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், திடீரென மும்பைக்கு கிளம்பி சென்றதால், சசிகலா பதவியேற்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சூழ்நிலையில், தற்போது “சசிகலா முதலமைச்சராக வாய்ப்பே இல்லை என்றும், அவர் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக, ஜாதகத்தில் கூறியிருந்தால் அது தவறான கணிப்பு என்று சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மேலும், பிப்ரவரி 9ம் தேதிக்குப் பிறகு இதன் முழுவிவரம் தெரியவரும்,’’ என்றும் சுப்ரமணியன் சுவாமி சூசகமாக குறிப்பிட்டுள்ளது, அதிமுகவினரிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.