06/2/2017 முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்று கொள்வதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து நேற்றைய தினம் தனது ராஜினாமா கடித்தத்தை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இந்த ராஜினாமாவை ஏற்று கொள்வதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளிவந்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை முதலமைச்சராக தொடருமாறு பன்னீர்செல்வத்தை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.