செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

உலகிலேயே மிக இளமையான மக்கள் இவர்கள் தான்: ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா?

இந்த உலகில் என்றும் இளமையுடன், அதிக ஆண்டுகள் உயிர் வாழும் வரத்தை வாங்கி வந்துள்ளனர் குன்ஸா இனம்.
இவர்கள் இஸ்லாமிய மதத்தைக் கடைபிடிக்கிறார்கள். குன்சா என்பது அங்குள்ள இஸ்லாமியர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிக்கிறது. இந்த இனத்து மக்களை கோட்டீஸ் என்றும் அழைக்கிறார்கள்.
வடக்கு பாகிஸ்தானில் உள்ள கரகோரம் என்னும் மலைப்பிரதேசத்தில் தான் இந்த சாதியினர் வாழ்கின்றனர்.
குறிப்பாக, இவர்கள் அதிகம் வாழும் பகுதியென்றால் புருஸீ குன்ஞ்சவாலி என்னும் பள்ளத்தாக்குப் பகுதியில் தான்.
உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதும் அதிக ஆரோக்கியமாக இருப்பதும் இவர்கள் தான்.

இந்த இனத்தில் ஒருவருக்குக்கூட இதுவரையிலும் புற்றுநோய் வந்தது கிடையாது. 70 வயதிலும் பெண்கள் இங்கு சாதாரணமாக கர்ப்பம் தரிக்கிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். 90 வயது வரையிலும் மாதவிலக்கு நிற்பதே இல்லை.
இம்மக்கள் புருஸாஷ்கி என்னும் ஒரு வட்டார மொழியைப் பேசுகிறார்கள்.
இவர்கள் தங்களை அலெக்சாண்டரின் பரம்பரையில் இருந்து வந்தவர்கள் என்று நம்புகிறார்கள்.
நான்காம் நூற்றாண்டில் தான் இவர்கள் இந்த மலைப்பகுதிகளில் குடியேறியிருக்கிறார்கள்.
இந்த இனத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வெறும் 87 ஆயிரம் மட்டுமே. கல்வியிலும் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
வாழ்க்கை முறை
இவர்கள் வைச உணவுகளை மட்மே சாப்பிடுகிறார்கள். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால், முட்டை, வால்நட் போன்ற உலர் பழங்கள் ஆகியவற்றை சமைக்காமல் அப்படியே பச்சையாகச் சாப்பிடுகிறார்கள்.
வால்நட் இவர்களின் பிரதான உணவாக இருக்கிறது. வால்நட்டில் வைட்டமின் பி 17 அதிகமாக இருக்கிறது. அது புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
இவர்கள் வாழும் மலைப்பகுதிகளில் பெரும்பான்மையான நாட்கள் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை தான் இருக்கிறது. ஆனாலும் இவர்கள் குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்களாம்.
இவர்கள் மிக குறைவாக சாப்பிட்டு, அதிக தூரம் நடைபயிற்சி செய்கிறார்க்ள. ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலும் மிகச் சாதாரணமாக நடைபயிற்சி செய்கிறார்கள்.
வருடத்தில் குறைந்தது 2 – 3 மாதங்களுக்கு எந்த உணவும் இவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. பழச்சாறு மட்டுமே அருந்துகிறார்கள்.
இந்த இனத்தவர்களின் சராசரி ஆயுட்காலம் 120. 70 வயது வரையிலும் மிக இளமையாகத் தெரிகிறார்கள்.

Related Posts: