வியாழன், 2 பிப்ரவரி, 2017

மீண்டும் விறகு அடுப்புக்கு போகலாமா ? யோசிக்க வைக்கும் எண்ணெய் நிறுவனங்கள்…


வீடுகளில் பயன்படுத்தப்படும்  சமையல் காஸ் சிலிண்டரின் விலையை 66 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி எண்ணெய்நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்திற்பேற்ப டீசல், பெட்ரோல் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.பெட்ரோல், டீசல் விலை மாதம் ஒரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது

இதே போன்று வீடு, வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர்களை, வினியோகம் செய்யும் பொதுத் துறையைசேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலிய  நிறுவனங்கள்,. பன்னாட்டு  சந்தையில், கச்சா எண்ணெய்விலையின்  நிலவரத்துக்கு ஏற்ப, மாதம்தோறும், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. 
இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும்  சமையல் காஸ் சிலிண்டரின் விலையை 66 ரூபாய் 50 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
சென்னையில் கடந்த மாதம்  வீட்டு சிலிண்டர், 594.50 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, அதன் விலை, 66.50 ரூபாய் உயர்ந்து, 661 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19 கிலோ, வணிக பயன்பாட்டு சிலிண்டர், 1,233.50 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது  அதன் விலை, 104.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 1,338 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால், பழையபடி விறகு ஆடுப்பை பயன்படுத்தலாமா என வீட்டம்மாக்கள் யோசித்து வருகின்றனர்.