வியாழன், 2 பிப்ரவரி, 2017

உயிரை பறிக்கிறதா லிச்சி பழங்கள்..?

Lichi

பீகாரில், காரணம் தெரியாமல் குழந்தைகள் உயிரிழப்பதற்கு லிச்சி பழங்களை அவர்கள் சாப்பிடுவதும் காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் முசார்பூர் பகுதியில் தான் அதிகப்படியான லிச்சி பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் அதிகப்படியான குழந்தைகள் உயிரிழக்கின்றனர். இவற்றிற்கு சரியான காரணம் தெரியவில்லை. இதனிடைய லிச்சி பழங்கள் சாப்பிடுவதும் குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என லான்செட் ஜெர்னல் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம், ஈரப்பதம், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் தான் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுவதாக ஒரு காலத்தில் கருதப்பட்டாலும், நோய்க்கான முழு காரணிகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வியாதி வருவதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் குழந்தைகள் லிச்சி பழங்களை சாப்பிட்டு, இரவு உணவுகளை தவிர்த்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே லிச்சி பழங்களை சாப்பிவதும் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.