செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

இம்மாத இறுதிவரை குளிர் இருக்கும்… வாட்டுது பனி

சென்னை: பிப்ரவரி மாத இறுதிவரை குளிர் வாட்டும் என்று தெரிய வந்துள்ளது. குளிர்காலம் போனாலும் பனியின் தாக்கம் அதிகம் தான் உள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து ஜன., 5 முதல், குளிர்காலம் நிலவுகிறது. ஆரம்பத்தில் குளிர் குறைவாக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரிக்க… வெப்பநிலை குறைந்துள்ளது.
ஊட்டியில், வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாக குறைந்து கடும் குளிர் வாட்டுகிறது. அதேபோல் தர்மபுரியில் 16, வேலுாரில் 16, சேலத்தில் 17 டிகிரி செல்சியஸ் என்று வெப்பநிலை இயல்பான அளவை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, அதிகாலை நேரங்களில் பனிக்காற்று வீசுகிறது.
சில தினங்களாக, அதிக குளிர் நிலவுவதாக, பொதுமக்கள் உணர்கின்றனர்.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் கூறுகையில், ஜன., முதல், பிப்., இறுதி வரை, குளிர்காலம் நிலவுகிறது. 
இந்த ஆண்டு தமிழகத்தின் வட மாவட்டங்களில் வழக்கமான வெப்பநிலையை விட, ஒரு டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. காலை நேரங்களில் அதிக குளிரை மக்கள் உணர்கின்றனர் என்றார்.

Related Posts: