சசிகலாவை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அரசியல் சாசனத்தை மீறுவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை தொடர்ந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் டெல்லியில் செய்தியாளரிடம் பேசுகையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை உடனடியாக முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஜனநாயகம் மீறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சட்டத்தின்படியே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : February 07, 2017 - 07:19 PM
source; new gen media