முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் இன்று இரவு 9 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தார். அங்கு வந்த முதல்வர் பன்னீர்செல்வம் சுமார் 45 நிமிடங்கள் யாரிடமும் பேசாமல் சமாதியின் முன்பு தியானத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, தியானத்தை கலைத்த பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளிக்க ஆரம்பித்தார். அந்த பேட்டியில்..
என்னுடைய மனசாட்சி உந்துதாலால் இங்கு அமர்ந்து அஞ்சலி செலுத்தினேன். ரத்தத்தின் ரத்தமான உறவுகளுக்கு தெரியபடுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை உந்துதல்படுத்தப்பட்டது. இதனால் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் சில உண்மைகளை சொல்லப்போகிறேன்.
பொதுச்செயலாளராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா கூறினார். முதலில் என்னை முதலமைச்சராக பதவியேற்கச் சொன்னதை நான் ஏற்கவில்லை.
சசிகலாவை ஊருக்கு கூட்டிச்செல்ல விரும்புவதாக திவாகரன் கூறினார். கருத்துவேற்றுமையை தவிர்க்க முதலமைச்சர் பதவி ஏற்க சம்மதித்தேன்.
சசிகலாவை ஊருக்கு கூட்டிச்செல்ல விரும்புவதாக திவாகரன் கூறினார். கருத்துவேற்றுமையை தவிர்க்க முதலமைச்சர் பதவி ஏற்க சம்மதித்தேன்.
முதல்வரான 3 நாட்களுக்கு முன் சசிகலாவை பொதுச்செயலாளராக ஆக்க கூறினார்கள். சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானபின் என்னுடைய கடமையை சிறப்பாக செய்தேன்.
வர்தா சீரமைப்பு பணிகளை சிறப்பாக செய்தேன். ஜெயலலிதாவின் நற்பெயருக்காகவே நற்பணிகளைச் செய்தேன். நான் சிறப்பாக பணியாற்றியது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
குடிநீருக்காக கிருஷ்ணா நதி நீரை வரவழைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். அவ்வாறு சந்தித்து முடிவுகண்டதால் நல்ல பெயர் கிடைத்தது.
மெரினா எழுச்சியின்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.
மெரினா எழுச்சியின்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டேன். அதன்பின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். என்னுடைய அமைச்சரவையில் உள்ளவரே அவ்வாறு பேட்டியளித்தது நீதியா அல்லது நியாயமா என்று தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் சசிகலாவிடம் தெரிவித்தேன். அவர் கண்டித்துவிட்டேன் இனிமேல் அப்படி பேச மாட்டார் என்று தெரிவித்தார். உதயகுமார் பேச்சை கண்டித்த அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதே கருத்தை வலியுறுத்தி மதுரையில் பேட்டியளிக்கிறார்.
என்னை முதல்வராக வைத்துக்கொண்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும்? என்னுடைய மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்து. கட்சியின் நிலையை கண்டு அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். என்னால் கட்சிக்கு பங்கம் ஏற்படக்கூடாது என்பதால் இதை யாரிடமும் சொல்லவில்லை.
இந்த சூழலில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எம்எல்ஏக்கள் கூட்டம் பற்றி எனக்கு தகவல் இல்லை. எதற்காக கூட்டப்பட்டது என்றுகூட எனக்கு தெரியாது. என்னை கட்டாயப்படுத்தியதால்தான் நான் ராஜினாமா செய்தேன்.
எனவே, அதிமுகவை கட்டிக்காக்க நல்ல தொண்டன் அல்லது நல்வழிப்டுத்துபவர் யாராவது ஒருவர் தலைமை தாங்கினால் நான் ஏற்பேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.
மக்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவேன் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.