சனி, 24 ஏப்ரல், 2021

திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் தடை? 26 4 2021

 தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு மேலும் கூடுதல் கட்டுபாடுகளை தமிழ அரசு இன்று அறிவித்துள்ளது, வருகின்ற 26 ஆம் தேதி (26 4 2021 ) முதல் திரையரங்கம், வணீக வளாகம், அழகு நிலையங்கள், ஜவுளிக்கடைகள், உடல்பயிற்சி மையங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு பேருந்துகளில் இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படும். உணவகங்கள், தேனீர் கடைகளில் பார்சம் மட்டுமே வழங்கப்படும் என்றும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதியில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வழிப்பாட்டு தளங்களிள் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை. வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் உள்பட 4 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி.

புதுச்சேரியை தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவதற்கு இ- பாஸ் கட்டாயம் என்றும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 50% பணியாளர்கள் கட்டாயமாக வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்விகி, சொமாட்டோ உள்ளிட்ட மின் விநியோக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுள்ளது. அதேபோல், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படுள்ளது. ஏற்கனவே அமலில் இருக்கும் ஞாயிற்றுகிழமை முழு ஊரங்கும், இரவு ஊரங்கும் தொடரும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

source : https://www.news7tamil.live/new-restriction-in-tamilnadu-from-monday.html