தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுகிறது. அதாவது இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முழு ஊரடங்கின் போது, இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், அனைத்துக் கடைகளும் செயல்பட அனுமதியில்லை, என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உணவகங்களில், பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும், பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
source https://www.news7tamil.live/sunday-full-lockdown-not-allowed-and-allowed-restriction.html